Sunday, July 12, 2020
Home Desam 24X7 ம.இ.கா பத்து கவான் தொகுதியின் ஏற்பாட்டில், வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு திவாகரன்...

ம.இ.கா பத்து கவான் தொகுதியின் ஏற்பாட்டில், வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு திவாகரன் சுப்பிரமணி சமையல் பொருட்கள் வழங்கி உதவி மு.வ.கலைமணி

பிறை, ஜூன் 28-
ம.இ.கா பத்து கவான் தொகுதியின் ஏற்பாட்டில், தாமான் இன்ராவாசி ஜாயா கிளையின் ஆதரவுடன் இங்குள்ள வசதி குறைந்த  20 இந்திய குடும்பத்தினருக்கு  சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.
 
ம.இ.கா  பாயான் பாரு 
தொகுதியின் செயலாளரும், பிரபல தொழிலதிபருமான திவாகரன் சுப்பிரமணி இப்பொருளுதவியை மகிழ்வோடு எடுத்து வழங்கினார்.
 
மாநில ம.இ.காவின் தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் சிறப்பு வருகைத் தந்து நிகழ்வை தொடக்கி வைத்து பேசுகையில், 20 வகையான சமையல் பொருட்களை அன்பளிப்பு செய்து நல்லுதவி வழங்கியிருக்கும் சு.திவாகரனை வெகுவாக பாராட்டினார். 
 
திவாகரன் பாயான் பாரு தொகுயிலுள்ள வசதி குறைந்த 100 க்கும் மேற்பட்ட இந்திய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகின்றார். ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ அவர்கள் கொண்டு வந்துள்ள,  ம.இ.கா உதவி திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இவரது நல்லுதவிகள் நம் மக்களுக்கு  துணை நிற்கின்றன என அவர் கூறினார்.
 
தொடர்ந்து ம.இ.கா பத்து கவான் தொகுதியின் தலைவர் சூ.இராமலிங்கம், அன்பளிப்பு செய்து உதவிக் கரம் நீட்டிய சகோதரர் திவாகரனுக்கு நன்றியை தெரிவித்ததோடு, அவரது நற்சேவை என்றுமே நமக்கு தேவையென புகழாரம் சூட்டினார்.
இன்ராவாசே ஜாயா கிளையின் தலைவர் சுரேஷ் செல்லையாவின் ஏற்பாட்டு ஆதரவிற்கு பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் ம.இ.கா பத்து காவான் தொகுதியின் துணைத் தலைவர் மு.வ.கலைமணி, தொகுதிப் பொருளாளர் க.சேகர், பிறை வட்டார கிளைத் தலைவர்கள் மு.ஞானசேகரன், சியாம் சேகர், தர்மலிங்கம், தொகுதி இளைஞர் பகுதித் தலைவர் இளமாறன், பாயான் பாரு தொகுதியைச் சேர்ந்த ரா.சசிகுமார், மத்தியூஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி   கெடா,பாலிங்.ஜூலை 9. மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும், சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நான் நல்லா பேரும் புகழுடன் வாழக் காரணம் இயக்குநர் கே. பாலசந்தர்தான். – நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சி

சென்னை, ஜூலை 9-  தான் பெயரோடும் புகழோடும் வாழக் காரணம் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த நெகிழ்ச்சியுடன் கூறினார்.    இன்று கே. பாலசந்தரின் 90ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவர்...

கோவிட் 19 – இன்று 6 புதிய சம்பவங்கள் பதிவு சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 9-  கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இன்று நாட்டில் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.    இந்நிலையில் 13 பேர் இன்று...

தேசிய கோட்பாடு கல்விதான் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கருத்து

புத்ராஜெயா, ஜூலை 9 –  தேசிய கோட்பாடு கல்விதான்  நாட்டின் அடிப்படை கட்டமைப்பு என பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.    நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசிய கோட்பாடு முக்கிய பங்காற்றுவதுடன் இதன் அவசியத்தை நாம்...

Recent Comments