Friday, August 7, 2020
Home Desam 24X7 மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு...

மலேசிய இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு சந்திரன், சூரியனாக கடமையாற்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் செகு ராமசாமி பாராட்டு

தேசம் செய்தியாளர்
மு.வ.கலைமணி
 
கெடா,பாலிங்.ஜூலை 9.
மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் புதிய கூட்டணி அரசாங்கத்தில் ஓங்கி ஒலிக்க ஒரே குரலாகவும்,
சூரியனும் சந்திரனும் போல தொடர் ஒளி வீச ஒன்றிணைந்து செயல்பட்டுவரும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணனும் விவேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருவதாக ம.இ.கா பாலிங் தொகுதி தலைவர் செகு இராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
 
கடந்த காலங்களில் கட்சியில் நடந்தது போல் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் சிண்டு முடித்து விட்டு கீழறுப்பு வேலைகள் எல்லாம் இனி ம.இ.காவில் என்றுமே நடக்க வாய்ப்பில்லாமல் செய்த, பண்பட்ட தலைவர்களாக இருவரும் செயலாற்றி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை ஏற்படுத்த முயன்ற ஒரு சில புதிய கட்சிகளும் ம.இ.காவின் துரித சமுக நடவடிக்கையில் காணாமால் போய் விட்டதாக ராமசாமி குறிப்பிட்டார்.
 
மலேசியாவில் இந்தியர்கள் 6.4% மட்டுமே மக்கள் தொகை எண்ணிக்கை இருப்பதாக மக்கள் கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும் , சராசரியாக  7% இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொடர்ந்து இந்நாட்டில் நிலை நிறுத்த அனைவரும் ம.இ.கா என்ற அரசியல் சமூக குடையின் கீழ் ஒன்றிணைந்து செயல்படுவது சமூக ஒற்றுமைக்கு வித்தாகும்.
அவ்வகையில், டத்தோ கோகிலன் பிள்ளையுடன் கெராக்கான் கட்சி இந்தியர்கள், டத்தோ நல்லாவின் எம்.ஐ.யு.பி, ஐ.பி.எப்  உத்தாமா கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களை ம.இ.காவில் இணைத்தது சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
 
தேசிய கூட்டணி அரசாங்கத்தில் மலாய்க்காரர் ஒற்றுமைக்கு அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சிகள் இணைந்தது மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும். ஆகவே, இந்தியர்களின் ஒன்றித்த நலம் பேண ம.இ.கா எனும் தேன்கூட்டில் ஐ.பி.எப் , மக்கள் சக்தி மற்றும் பி.பி.பி கட்சி தொண்டர்களை இணைத்து சமூக மேன்மைக்கு வித்திட சிறு சிறு தனிநபர் கட்சிகள் முன்வர வேண்டும். 
 
தேன் கூடு சிதராமல் இருந்தால் ஒன்றுபட்டு அதிகமான தேனைத் எடுக்கலாம் என செகு ராமசாமி உவமையாக சுட்டிக் காட்டினார்.  ம.இ.கா எனும் தேன் கூட்டை
டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஶ்ரீ சரவணனும் சிறப்பாக வழிநடத்தி வருவதை ம.இ.கா பாலிங் தொகுதி உட்பட கெடா மாநில கிளைத் தலைவர்கள் முழுமையாக தோள் கொடுத்து வருவதாக செகு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments