Friday, August 7, 2020
Home News அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் இளைஞர் மாரடைப்பால் திடீர்...

அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்

மும்மை, ஜூலை 18-
அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போலவே இருந்த பிரபல மாடல் இளைஞர் வயது 28 மாரடைப்பால்  திடீர் மரணமடைந்துள்ளார்.
 
காஷ்மீரை சேர்ந்த ஜுனைத் ஷா என்ற இந்த மாடல் இளைஞர்  திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
காஷ்மீரை சேர்ந்த, ஜுனைத் ஷா ரன்பீர் கபூர் போலவே உள்ளார் என, கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மீடியா ஒன்று செய்து வெளியிடவே இவர், மிகவும் பிரபலமானார். மாடலிங் துறையில் கால் பாதிக்க ஆர்வமாக இருந்த ஜுனைத் ஷாவிற்கு, அவரின் தோற்றம் எளிதாக வாய்ப்புகளை பெற்று தந்தது.
 
ரன்பீர் கபூரை நடிக்க வைக்க விரும்பிய பலர் இவரை மாடலிங் விளம்பரங்களில் நடிக்க வைத்தனர். இதனால் இவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒருமுறை இவரை பார்த்து, ரன்பீர் கபூரின் தந்தையும் மறைந்த நடிகருமான ரிஷி கபூர், தன்னுடைய மகனையே பார்ப்பது போல் உள்ளது என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து திரையுலக பணிகளும் முடங்கியதால், ஜுனைத் ஷா, ஸ்ரீநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தகவல் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 28 வயதே ஆகும் இளம் மாடலான இவருக்கு தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments