Friday, September 18, 2020
Home Desam 24X7 'இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18-
இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
 
‘ஒரே மலேசியா’ கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும் நான் பிரதமராக இருக்க ஆசைப்பட்டேன்; அதன்படி செயல்பட்டேன். 
நான் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்  இந்திய சமுதாயத்தின் மீது கூடுதல் அக்கறை எடுத்தேன். என்னைப் போல்  இதற்கு முன்  எந்த ஒரு பிரதமரும்  இந்திய சமுதாயத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்தியதாக வரலாறு இல்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்தார்.
 
இந்திய சமுதாயத்தை உருமாற்றம் செய்ய பிரதமர் துறை அமைச்சின் கீழ் பல்வேறு சிறப்புத் திட்டங்களை மேற்கொண்டிருந்தேன். இதன் வழி கல்வி, பொருளாதாரம், சமயம்  தொழில் என்று இந்திய சமுதாயத்திற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கி பல திட்டங்களை வகுத்துச்  செயல்படுத்தியுள்ளதாக நஜிப் சொன்னார்.
 
‘நான் பிரதமராக இருந்த காலகட்டத்திலும், பல கசப்பான காலகட்டத்திலும் மக்கள் சக்தி கட்சியும், டத்தோஸ்ரீ தனேந்திரனும் எனக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த ஆதரவு எப்போதும் தொடர வேண்டும் என்று டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
 
மக்கள் சக்தி ஏற்பாட்டில் ‘மக்கள் சக்தி பொறுப்பாளர்களுடன்  நஜீப்’ எனும் நிகழ்ச்சி, இன்று  பூச்சோங் ஜி.வி நாயர் உணவகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ நஜீப், மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன், தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ ஜி.வி நாயர், மக்கள் சக்தி பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments