Friday, August 7, 2020
Home Desam 24X7 உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் ...

உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கல்வி அமைச்சரிடம் பேச்சு நடத்துவார் ஷா ஆலம் தொகுதித் தலைவர் வழக்கறிஞர் எஸ்.முருகவேல் தகவல் தேசம் சிறப்புச் செய்திகள் குணாளன் மணியம்

ஷா ஆலம், ஜூலை 17-
நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்சி மாட் ஜிடினிடம் பேச்சு நடத்தவிருப்பதாக 
ஷா ஆலம் ம.இ.கா தொகுதித் தலைவர் வழக்கறிஞர் எஸ்.முருகவேல் கூறினார்.
 
இந்த ஆலய விவகாரம் தொடர்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். இந்த ஆலய உடைப்பு தொடர்பான நோட்டீஸ் உள்ளிட்ட விவரங்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தி ஆலய உடைப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக தம்மிடம் கூறியதாக தேசம் தொலைக்காட்சி தொடர்பு கொண்ட போது முருகவேல் அத்தகவலை தெரிவித்தார்.
 
இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கூட்டரசு நிலம் மற்றும் இயற்கைவள துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கல்வி அமைச்சரிடம் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அப்போதைய புக்கிட் ஜெலுதோங் தோட்ட நிர்வாகம் வழங்கிய நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஆலயத்திற்கான நிலத்தை பதிவு செய்ய கடந்த 1970 தொடங்கி விண்ணப்பம் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த நிலம் கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
 
கடந்த 2006இல் இந்த ஆலயத்தை அகற்ற ஒரு போராட்டம் நிகழ்ந்தது. எனினும் ஷா ஆலம் மாநகர் மன்றத் தலைவருடன் நடத்தப்பட்ட பேச்சில் அம்முயற்சி கைவிடப்பட்டு ஆலயத்திற்கு நிலத்தை வழங்க வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலய விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
இதனிடையே இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் ஜூலை 27ஆம் தேதி சம்பந்தப்பட்ட அமைச்சர், துறைகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியதாக தெரிகிறது. இந்த ஆலயம் உடைபடுவதில் இருந்து தப்பிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments