Friday, August 7, 2020
Home Desam 24X7 "கருணையோடு நடந்து கொள்ளுங்கள்" மாநகர் மன்றம், ஊராட்சி மன்றம், நகராண்மைக்கழகம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு மக்கள்...

“கருணையோடு நடந்து கொள்ளுங்கள்” மாநகர் மன்றம், ஊராட்சி மன்றம், நகராண்மைக்கழகம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு மக்கள் வேண்டுகோள் தேசம் சிறப்புச் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 17-
அங்காடி வியாபாரிகளிடம் 
மாநகர் மன்றம், ஊராட்சி மன்றம், நகராண்மைக்கழகம் உள்ளிட்ட துறைகளுக்கும் அதன் அமலாக்க அதிகாரிகளும் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நாட்டில் பி40 பிரிவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அங்காடி வியாபாரம் செய்து வருகின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பேருதவியாக இருந்து வருகின்றது. அதுவும் கோவிட் 19 காலகட்டத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த போது பலர் வாழ்வாதாரம் இழந்து தற்போதுதான் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கி வாழ்கையை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இத்தகைய ஏழை வியாபாரிகளிடம் இரக்கமின்றி கெடுபிடியாக நடந்து கொள்ளும் ஒரு சில அமலாக்க அதிகாரிகளின் போக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடமாடும் கடையை வண்டியில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு மலாய் பெரியவரிடம் இரக்கதின்றி மரியாதை குறைவாக பேசியதோடு அவரது வியாபார பொருட்களை அபகரித்துச் செல்லும் நகராண்மைக்கழக அதிகாரிகள்  தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைத் தொடரந்து பொதுமக்கள் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
 
அமலாக்க அதிகாரிகள் அங்காடி வியாபாரிகளிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். இத்தருணம் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள தருணம். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளும் தருணம். இத்தகைய சூழலில் அவர்களிடம் லைசைன்ஸ் அனுமதி இருக்கிறதா? இங்கே கடையை போடக்கூடாது என்று சட்டம் பேசுவதை விடுத்து அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை ஆலோசியுங்கள் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.
 
மாநகர் மன்றம், நகராண்மைக்கழகம், ஊராட்சி மன்ற அதிகாரிகள் ஏழை மக்களிடமா சட்டம் பேச வேண்டும்? சில மாதங்களுக்கு முன்பு கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா, தன் வாகனத்தில் லைசென்ஸ் இல்லாமல் அங்காடி வியாபாரம் செய்த ஒரு மாதுவிற்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு அமலாக்க அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
 
அதைவிடுத்து அங்காடி  கருணை இல்லாமல் கெடுபிடியாக நடந்து கொள்ளக் கூடாது. அங்காடி வியாபாரிகள் முறையாக வியாபாரம் செய்ய உதவி வழங்குங்கள். அவர்களின் வியாபாரத்தை சட்டம் எனும் பெயரில் அழித்து விடாதீர்கள் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments