Friday, August 7, 2020
Home Desam 24X7 கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18- 
கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
 
கோவிட் 19  பெருந்தொற்றைக் கையாள்வதில் டத்தோ நோர் ஹிஷாம் மிகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பதை பல்வேறு உலக நாடுகளின் தலைவர் பாராட்டு தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர்
டத்தோ நோர்  ஹிஷாம்  அப்துல்லாவிற்கும், சுகாதார அமைச்சுக்கும் உலக அளவிலான சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தை அங்கீகரிக்கும் வகையில் THE BRANDLAUREATE AWARD விருதுக்கான CERTIFICATE OF RECOGNITION AND APPRECIATION என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
 
அதேநேரத்தில் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான OUTSTANDING BRAND LEADERSHIP விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருது மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் சிறந்த சேவையை வழங்கும் சுகாதார அமைச்சு மற்றும் இதர நிறுவனங்களின் ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் புலப்படுத்துவதாக டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
 
வழிகாட்டியைத் துல்லியமாக ஆராய்வது, ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இதர அமைச்சுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துதல் போன்ற கோவிட்-1919 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் டத்தோ நோர்  ஹிஷாம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments