Friday, August 7, 2020
Home Desam 24X7 தேசிய முன்னணி இளைஞர் பகுதி உச்சமன்ற கூட்டம் இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் இராஜகோபாலு இளைஞர்...

தேசிய முன்னணி இளைஞர் பகுதி உச்சமன்ற கூட்டம் இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் இராஜகோபாலு இளைஞர் பகுதி பொறுப்பாளர்களுடன் பங்கேற்றார்

கோலாலம்பூர், ஜூலை 17-
இனவாத பிரச்சினைகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க, இப்பிரச்சினையை தேசிய முன்னணி இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கியிடம் ஒரு கோரிக்கையாக முன்வைத்துள்ளதாக மஇகா இளைஞர் பகுதி தலைவர் தினாளன் இராஜகோபாலு கூறினார்.
 
இது போன்ற பிரச்சினைகள் இனி வரும் காலங்களில் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு இது தொடர்பில் டத்தோ அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கியிடம் மஇகா இளைஞர் பகுதி அதனை தடுக்கும் விதமாக ஒரு கோரிக்கையாக முன்வைத்துள்ளதாக தினாளன் சொன்னார்.
 
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் போக்கிற்கும் ஏற்ப சரியான நேரத்தில் தேசிய முன்னணி இளைஞர் மன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் இனவாத பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அரசியல் சார்ந்த பிரச்சினைகள்  இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தினாளன் தெரிவித்தார்.
 
இது போன்ற இனவாத பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் எழக்கூடாது என தேசிய முன்னனி இளைஞர் பகுதியினர் ஒருமனதாக முடிவெடுத்தனர். தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டு மக்களிடம் ஒற்றுமையுணர்வை மேலோங்க செய்வதில் தேசிய முன்னணி இளைஞர் பகுதி தொடர்து பாடுபடும் எனவும் உறுதியெடுக்கப்பட்டது. 
 
நாடாளுமன்றம் என்பது ஒருவரை ஒருவர் வெறுமனே சாடி கொள்வதற்கான களம் அல்ல. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்ந்து காணப்படும் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளும் செயல் குறித்து கருத்துரைக்கையில்  தினாளன் அவ்வாறு கூறினார்.
 
இதனிடையே, கோவிட்-19க்குப் பிந்திய இளைஞர்களுக்கான பொருளாதார மீட்சி திட்டத்தைப் பற்றிய ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதற்காக சிறப்புச் செயற்குழு ஒன்றை அமைப்பதற்கு இக்கூட்டத்தில் தேசிய முன்னணி இளைஞர் பகுதி இணக்கம் கண்டுள்ளது.  
 
இந்தச் சிறப்புச் செயற்குழு வழங்கும் ஆலோசனைகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு வரவுச் செலவுத் திட்டத்திலும் 12வது மலேசியத் திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக தினாளன் குறிப்பிட்டார். 
 
தேசிய முன்னணி இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கி, இளைஞர்களுக்கான இடைக்காலச் செயற்சிட்டத்தைப் பற்றியும் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். எந்தச் சூழலிலும் மக்கள் நலனுக்கும் இளைஞர் வளத்திற்கும் முன்னுரை வழங்குவதிலிருந்து தேசிய முன்னணி இளைஞர் பகுதி என்றுமே பின்வாங்காது எனவும் அவர் கூறினார்.
 
இக்கூட்டத்திற்கு மஇகா இளைஞர் பகுதிப் பேராளர்களுக்கு அதன் தேசிய தலைவர் தினாளன் இராஜகோபாலு தலைமையேற்றிருந்த வேளையில், தேசிய மஇகா இளைஞர் பகுதிச் செயலாளர் தியாகேஸ் கணேசன், மத்திய செயற்குழு உறுப்பினர் புனிதன், இளைஞர் பகுதித் தகவல் பிரிவுத் தலைவர் பாலமுரளி, பொருளாளர் கேசவன், உச்சமன்ற உறுப்பினர் சுவாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தேசிய மஇகா இளைஞர் பகுதிப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments