Friday, September 18, 2020
Home Desam 24X7 பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித்...

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18-
பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி
சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.
 
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் அம்னோவுக்கு பதிலாக மஇகா வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கலாம் என்பதால் அது குறித்து ஆலோசிக்கலாம் என்று  டத்தோ டி.முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
பேரா மாநில அரசாங்கத்தில் மஇகாவின் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஏதுவாக சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதி ம.இ.காவுக்கு தற்காலிமாக இரவல்  வழங்கப்பட  வேண்டும் என்று டத்தோ முருகையா சொன்னார்.
 
பேரா மாநிலம் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையில்  அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு ஒரு நியமனப் பதவிகள்கூட வழங்க இன்றைய மந்திரி பெசார் முன்வரவில்லை.
 
கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை அம்னோ எடுத்துக் கொண்டு தோல்வி அடையக்கூடிய தொகுதிகளான ஜெலாப்பாங், சுங்காய் போன்ற தொகுதிகள் வழங்கப்பட்டன. தோல்வி என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு தோல்வியை ஏற்றுக் கொண்டது மஇகா.
 
நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் எண்ணிக்கை சரிந்து விடக்கூடாது எனும் நோக்கத்தில் இடைத்தேர்தலை எதிர்கொண்ட கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்தது மஇகா. அங்கு மஇகா வெற்றி பெற்றிருந்த நிலையில் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 
 
கேமரன்மலை தொகுதியில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும்  பெருந்தன்மையுடன் அம்னோவுக்கு அதனை விட்டுக் கொடுத்தது மஇகா. அதேபோன்று பேரா மாநில அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதி இடம்பெறும் வகையில் சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  மஇகா மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அம்னோ பெருந்தன்மையுடன் இத்தொகுதியை தற்காலிகமாக மஇகாவுக்கு இரவல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ முருகையா குறிப்பிட்டார்.
 
சிலிம்ரீவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ குசாய்ரி அப்துல் தாலிப் அண்மையில் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments