Friday, August 7, 2020
Home Desam 24X7 ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கல்வி...

ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கல்வி அமைச்சரிடம் பேசி ஆலய உடைப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டார் ஷா ஆலம் தொகுதித் தலைவர் வழக்கறிஞர் எஸ்.முருகவேல் தகவல் தேசம் சிறப்புச் செய்திகள் குணாளன் மணியம்

ஷா ஆலம், ஜூலை 17-
நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஷா ஆலம் செக்‌ஷன் 11 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கல்வி அமைச்சர் டாக்டர்  மாட் ஜிடினுடன் சில மணிநேரத்திற்கு முன் பேச்சு நடத்தி, ஆலய உடைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக
ஷா ஆலம் ம.இ.கா தொகுதித் தலைவர் வழக்கறிஞர் எஸ்.முருகவேல் சற்று முன் தேசம் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
 
இந்த ஆலய விவகாரம் தொடர்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களிடம் இன்று தொடர்பு கொண்டு பேசினேன். இந்த ஆலய உடைப்பு தொடர்பான நோட்டீஸ் உள்ளிட்ட விவரங்கள் அவரிடம் வழங்கப்பட்ட சில மணிநேரத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்சி மாட் ஜிடினுடன் கைப்பேசி வழி தொடர்பு கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நிலமையை விளக்கிக் கூறி ஆலய உடைப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக முருகவேல் கூறினார்.
 
இந்த ஆலய விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சருடன் தொடர்ந்து  பேச்சு நடத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்பதால் அனைவரும் குறிப்பாக அரசு சாரா இயக்கங்கள் அமைதி காக்கும்படி டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டதாக முருகவேல் சொன்னார்.
 
இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கூட்டரசு நிலம் மற்றும் இயற்கைவள துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments