Friday, August 7, 2020
Home Desam 24X7 BSN வங்கியின் வட்டியில்லா கடன் எத்தனை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது? BSN வங்கி விளக்கமளிக்குமா? இந்திய...

BSN வங்கியின் வட்டியில்லா கடன் எத்தனை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது? BSN வங்கி விளக்கமளிக்குமா? இந்திய சிறுதொழில் வர்த்தகர்கள் கேள்வி தேசம் சிறப்புச் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 17-
பேங்க் சிம்பானான் நேஷனல் எனப்படும் BSN வங்கியின் வட்டியில்லா கடன் எத்தனை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை 
BSN வங்கி விளக்கமளிக்க முன்வர வேண்டும் என்று
இந்திய சிறுதொழில் வர்த்தகர்கள் பலர்  கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்த நடுத்தர மற்றும் சிறுதொழில் வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கத்தில்  மைக்ரோ கிரேடிட் எனும் வட்டியில்லா கடன் வழங்க அரசாங்கம் முன்வந்தது. இந்த கடன் பலருக்கு கிடைக்கவில்லை என்று 
 தேசம் தொலைக்காட்சியை  தொடர்பு கொண்ட சிறுதொழில் வர்த்தகர்கள் பலர் தங்கள் உள்ளக்குமுறலை முன்வைத்தனர்.
 
இந்த வட்டியில்லா மைக்ரோ கிரேடிட் கடனுக்கு பலரும் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பம் செய்வதற்கு நிறுவன SSM பதிவு இருக்க வேண்டும் என்பதோடு இந்நிறுவனம் ஓராண்டு காலத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
 
இந்த வட்டியில்லா கடன் விண்ணப்பம் கடந்த ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இக்கடனுக்கு இந்தியர்கள் பலரும் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், பெரும்பாலானவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு பணம் இல்லை என்றும் விண்ணப்பம் செய்த இந்தியர்கள் பலருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டிருந்ததாக தேசம் தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட பலர் தகவல் தெரிவித்தனர்.
 
இந்த கடன் பெரும்பாலானவர்களுக்கு இக்கடனுதவி கிடைக்கவில்லை் என்பது குறுந்தகவல் வழி தெரியவந்துள்ளது. அப்படியானால் இந்த BSN வட்டியில்லாக் கடன் எத்தனை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வங்கி விளக்கமளிக்குமா என்று தேசம் தொலைக்காட்சியோடு தொடர்பு கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத பல சிறுதொழில் வியாபாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த கடன் தொகை உதவியாக இருக்கும் என்று விண்ணப்பம் செய்ததாகவும் ஆனால், எல்லா விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் தமது விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டதை Tidak  berjaya என்ற குறுதகவல் மூலம் தெரிந்து கொண்டதாக கோலாலம்பூரைச் சேர்ந்த ரவி என்று மட்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தேசத்திடம் தெரிவித்தார்.
 
இந்த கடன் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. எனினும் விண்ணப்பம் செய்தேன். இந்நிலையில் கடந்த ஜூன் மாத இறுதியில் எனக்கு BSN வங்கி அனுப்பிய ஒரு குறுந்தகவலில் Dana Tidak Mencukupi என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக சிலாங்கூரைச் சேர்ந்த மாரி என்பவர் தேசம் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
 
இந்த BSN வங்கிக் கடனில் பாகுபாடு இருப்பதாக தேசத்திற்கு வந்த பல தொலைப்பேசி அழைப்புகளின் வழி தெரியவந்துள்ளது. இது வெறும் கண்துடைப்பா? ஏன் இந்த பாகுபாடு? இந்திய சிறுதொழில் வர்த்தகர்கள் எத்தனை பேருக்கு இந்த வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது? BSN வங்கி விளக்கமளிக்க  வேண்டும் என்று இந்திய சிறு தொழில் வர்த்தகர்கள் பலரும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 18- பேராக் ஆட்சிக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை  என்பதை முன்நிறுத்தி சிலிம்ரீவர் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா களமிறங்க வேண்டும் என்று தேசிய ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வலியுறுத்தியுள்ளார்.   இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம்ரீவர் சட்டமன்றத்...

கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை சிறப்பாக கையாண்ட டத்தோ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது

புத்ராஜெயா ஜூலை 18-  கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்த டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு OUTSTANDING BRAND LEADERSHIP உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   கோவிட்...

‘இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே பல திட்டங்களைக் கொண்டு வந்தேன் -டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 18- இந்திய சமுதாய நலனில் அக்கறை கொண்டதன் விளைவாகவே அந்த சமூகத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.   'ஒரே மலேசியா' கொள்கையின்படி,  அனைத்து சமூகத்தினருக்கும்...

சைட் சாடிக் சைட் கைது செய்யப்படவில்லை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 18-  முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்...

Recent Comments