Saturday, October 23, 2021

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

Must Read

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை...

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத் திட்­ட­மிட்டு வரு­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

நாட்டு மக்­க­ளுக்கு நேற்று தாம் ஆற்­றிய உரை­யில், புதிய இயல்­பு­நி­லை­யின்போது கொரோனா கிருமி நமது வாழ்க்கையை ஆக்­கி­ர­மித்­துக்கொள்­ளாது என்­றும் மக்­கள் வேலைக்குச் செல்­ல­வும் நண்­பர்­களைச் சந்­திக்­க­வும் இசைக் கச்சேரி போன்ற பெரிய அள­விலான நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­க­வும் இறு­தி­யாக, முகக்­க­வ­ச­மின்றி வெளிப்புறங்களுக்குச் சென்று வர­வும் இய­லும் என்­றும் பிர­த­மர் லீ கூறி­னார்.

அத்­த­கைய மகிழ்ச்­சி­யான நிலை­யி­லி­ருந்து இப்­போது நாம் சற்றே விலகியிருப்பினும் சரி­யான திசையை நோக்­கிச் செல்கிறோம் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இறு­தி­யில் ஒரு­நாள் உல­க­ள­வில் கொரோனா பர­வல் தணிந்து­வி­டும் என்­றா­லும் அது முழு­மை­யாக அழிக்­கப்­ப­டாமல் மனி­தர்­களு­டன் தொடர்ந்து நீடித்­தி­ருக்­கும் என்­று அவர் சொன்­னார்.

அதா­வது, அவ்­வப்­போது சிறிய அள­வில் கொரோனா தொற்று ஏற்­ப­டு­வதை சிங்­கப்­பூர் எதிர்­பார்த்­து இ­ருக்க வேண்­டும் என்­றார் அவர்.

“அவ்­வப்­போது சிலர் கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­பதை ஏற்­றுக்­கொண்டு, ஒட்­டு­மொத்­த­ சமூ­கத்­தையும் பாது­காப்­பாக வைத்­தி­ருப்பதே நமது இலக்காக இருக்க வேண்­டும்,” என்று திரு லீ கேட்­டுக்­கொண்­டார்.

கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­படுத்த தொடர்ந்து நமது உத்­தி­களை நேர்ப்படுத்திக்கொள்ள வேண்­டும் என்ற அவர், குறிப்­பாக பரி­சோதனை, தொடர்­பு­க­ளின் தட­ம­றி­தல், தடுப்­பூசி போடு­தல் ஆகிய மூன்று நட­வ­டிக்­கை­களை அதிகள­வி­லும் விரை­வா­க­வும் மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தாக விளக்­கி­னார்.

ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோதனை, எச்­சில்/சளி மாதிரி பரி­சோ­தனை, மூச்­சுப் பகுப்­பாய்­வுச் சோதனை என இப்­போது வெவ்­வேறு கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் இருப்­ப­தைக் குறிப்­பிட்ட திரு லீ, விரை­வில் ஒரு­வர் தாமா­கவே கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் வகையில் சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் விற்­ப­னைக்கு வர­வி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்.

வேக­மா­க­வும் பரந்த அள­வி­லும் தொடர்­பு­க­ளின் தட­ம­றிந்து, நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை விரைந்து தனி­மைப்­ப­டுத்­த­வும் முதல்­முறை தடுப்­பூ­சிக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வித­மாக தடுப்­பூ­சித் திட்­டத்தை முடுக்­கி­வி­ட­வும் அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

அதற்கேற்ப, மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டில் ‘ஓ’, என்’, ‘ஏ’ நிலைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பின் 39 மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையோருக்கான தடுப்பூசி நடவடிக்கை தொடங்கும்.

எஞ்­சி­யுள்ள மூத்த குடி­மக்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்கள் முன்­ப­திவு செய்­யத் தேவை­யின்றி, தடுப்­பூசி மையத்­திற்கு நேரில் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

தொடர்ந்து நீடித்­தி­ருக்­கும் கொரோனா கிரு­மி­யு­டன் வாழ்­வது என்­பது சிங்­கப்­பூர் தனது எல்­லை­களை முழு­வதுமாக மூடி­யி­ருக்­க­வில்லை என்­பதைக் குறிப்பதாக திரு லீ சொன்னார்.

“உணவு, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள், ஊழி­யர்­கள், வர்த்­தக மற்­றும் பிற பய­ணி­கள் தொடர்ந்து வந்­து­போய்க் கொண்­டி­ருக்க வேண்­டும். சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கத் தேவை­யான செயல்­தி­றன்­மிக்க பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளு­ட­னும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னும் உல­கத்­து­டன் நாம் தொடர்­பில் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்,” என்­று அவர் கூறினார்.

அடுத்த மாதம் 13ஆம் தேதிக்­குப் பிறகு சமூக ஒன்­று­கூ­டல்­கள் மீதான கட்­டுப்­பா­டு­க­ளைச் சிங்­கப்­பூர் தளர்த்த முடிய வேண்­டும் என்றார் திரு லீ.

கொவிட்-19 சூழல் மேம்­பட்டு, சமூ­கத்­தில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறை­யும் பட்­சத்­தில் அது சாத்­தி­ய­மா­கும் என்­று அவர் குறிப்பிட்டார்.

சிங்­கப்­பூர் விழிப்­பு­நி­லையை அதி­கப்­ப­டுத்தி, கடு­மை­யான நட­வடிக்­கை­களை எடுத்து வரு­வ­தன் விளை­வாக அன்­றா­டம் பதி­வா­கும் புதிய கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தாக பிரதமர் குறிப்­பிட்­டார்.

“இன்­னொரு பெரிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வா­கா­மல் தடுத்து, கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் நாம் சரி­யான பாதை­யில் செல்ல வேண்­டும்,” என்­றார் அவர்.

இன்­னும் ஒரு வாரத்­தில் அது உறு­தி­யா­கத் தெரிந்­து­வி­டும் என்றும் சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைப் பின்­பற்ற வேண்­டும் என்­றும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

கொரோனா கிருமி உலகைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்து வந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, எதிர்காலத்திற்காக வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கே இப்போதைக்கு சிங்கப்பூர் முன்னுரிமை அளித்து வருவதாக திரு லீ குறிப்பிட்டார்.

ஒரே தேச­மாக இணைந்து, கிரு­மித்­தொற்­றைக் கடந்து, இன்­னும் வலு­வான, நம்­பிக்கைமிக்க நாடாக சிங்கப்பூர் உரு­வெ­டுக்­கும் என்று பிர­த­மர் உறு­தி­யு­டன் கூறினார்.

பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

♦ சமூகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையும் பட்சத்தில், ஜூன் 13க்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

♦ ஒருவர் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்விதமாக, எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ‘சுயபரிசோதனைக் கருவிகள்’ விரைவில் மருந்தகங்களில் விற்பனைக்கு வரும்.

♦ வேலையிடம் அல்லது சமூகம் போன்ற இயல்பான சூழல்களில், நலமாக இருப்போரும் அவ்வப்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

♦ கொரோனா தொற்றிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

♦ மாணவர்கள் இன்று முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.

60 வயதும் அதற்கும் மேற்பட்டோர், முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

♦ சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமியுடன் வாழத் தயாராக வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத்...

சமூகத்தில் 15 பேர் உட்பட மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 1) புதிதாக 18 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,069 ஆனது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்களில் எழுவருக்கு முன்னர்...

கொவிட்-19 தடுப்பூசிக்காக 26,000 மாணவர்கள் முன்பதிவு செய்தனர்

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -