Saturday, October 23, 2021

மக்கள் சேவையை விட ஆணவம் முக்கியமாகி விட்டது: மேற்கு வங்காள கவர்னர் கருத்து

Must Read

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை...

யாஸ்’ புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்காளத்துக்கு சென்றார். ஆனால், அவரும், கவர்னர் ஜெகதீப் தாங்கரும் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு 15 நிமிடங்களில் புறப்பட்டார்.

இந்தநிலையில், பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தை மம்தா புறக்கணித்தது பற்றி மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், உண்மையை தெளிவுபடுத்த இதை சொல்கிறேன். ஆய்வுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் இரவு 11.16 மணிக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து என்னிடம் அவசரமாக பேச விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமருடனான ஆய்வுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் (சுவேந்து அதிகாரி) பங்கேற்றால், தானும், தனது அதிகாரிகளும் புறக்கணித்து விடுவோம் என்று சூசகமாக தெரிவித்தார். என்ன செய்வது? மக்கள் சேவையை விட ஆணவம்(ஈகோ) முக்கியமாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னரின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி மூத்த தலைவர் சவுகதா ராய் எம்.பி. கூறியதாவது:-

கவர்னரின் கருத்து துரதிருஷ்டவசமானது. இப்படி பேச அவருக்கு அதிகாரம் இல்லை. மம்தா பானர்ஜி, 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளாா். மாநில மக்களின் நலன் மீதான அக்கறை அடிப்படையிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. என்ன செய்வது என்று அவருக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பங்கேற்றதால்தான், அதை புறக்கணித்ததாக பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Latest News

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற...

நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது...

கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கை

பிரதமர் லீ: சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 13ஆம் தேதிக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் மக்­கள் தங்­க­ளது வழக்­க­மான அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் வித­மாக சிங்­கப்­பூர் புதிய இயல்­பு­வாழ்க்­கைக்குத்...

சமூகத்தில் 15 பேர் உட்பட மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 1) புதிதாக 18 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,069 ஆனது. புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 15 பேர் சமூகத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்களில் எழுவருக்கு முன்னர்...

கொவிட்-19 தடுப்பூசிக்காக 26,000 மாணவர்கள் முன்பதிவு செய்தனர்

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக கிட்டத்தட்ட 52,000 பெற்றோர் அல்லது மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி வழி அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூன் 1) இரவு ஏழு மணி வரை கிடைத்த தகவலின்படி, 26,000க்கு மேற்பட்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -